ADDED : ஏப் 21, 2025 07:30 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி பண்ணாரி அம்மன் அன்னதானகுழு சார்பில், பழனிமலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்துக்கு தேவையான தக்காளி, கத்தரி, கேரட், முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான, நான்கு டன் காய்கறிகள், லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பழனி மலை முருகன் கோவிலில் பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்த சேவை பணியில் இணைந்து பணியாற்றும் வகையில், கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, காய்கறி வழங்கி வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
