/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதுகலை ஆசிரியர்கள் 401 பேர் பங்கேற்பு
/
முதுகலை ஆசிரியர்கள் 401 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 24, 2024 10:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில் நடந்த கவுன்சிலிங்கில், முதுகலை ஆசிரியர்கள், 401 பேர் கலந்து கொண்டனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர் கலந்தாய்வு நடந்து வருகிறது. முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கான பொது கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, பல்வேறு பாட பிரிவு ஆசிரியர்கள், 401 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் கலந்தாய்வில் பங்கேற்றனர். பாடப்பிரிவு வாரியாக கலந்தாய்வு நடந்தது.