/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் நீரில் மூழ்கி 41 பேர் பலி
/
ஈரோடு மாவட்டத்தில் நீரில் மூழ்கி 41 பேர் பலி
ADDED : மே 15, 2025 01:34 AM
ஈரோடு ;ஈரோடு மாவட்டத்தில், நீர் நிலைகளில் மூழ்கி நடப்பாண்டில் இதுவரை, 41 பேர் பலியாகி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, ஆசனுார், நம்பியூர் உள்ளிட்ட, 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில், நடப்பு ஆண்டில் கடந்த ஜன., 1 முதல் தற்போது வரை, 41 பேர் மூழ்கி இறந்துள்ளனர்.
மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் முருகேசன் கூறியதாவது: நடப்பாண்டில் இதுவரை தீ விபத்து தொடர்பாக 1,174 அழைப்புகள் வந்தன. 436 தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. ஒன்று மட்டும் பெரிய அளவிலும், நான்கு நடுத்தர அளவிலும் நடந்துள்ளன.
மீதமுள்ள, 432 தீ விபத்துகள் சிறிய அளவிலானது. ஆறுகள், வாய்க்கால், குளம், கிணறு போன்ற நீர் நிலைகளில் மூழ்கிய நபர்கள் மற்றும் கால்நடைகளை மீட்க, 155 அழைப்புகள் வந்தன. நீர் நிலைகளில் மூழ்கிய, 13 பேர் காப்பாற்றப்பட்டனர். 41 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். 93 கால்நடைகள் காப்பாற்றப்பட்டன. 11 கால்நடைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.