ADDED : அக் 04, 2026 06:08 AM
ஈரோடு:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும், நேற்று முன்தினம் மூடப்பட்டன.
இதனால் முறைகேடு மது விற்பனை நடக்கிறதா என்று, போலீசார் கண்காணித்தனர். இதில் ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்தி நகரை சேர்ந்த மணி, 56 என்பவரை, 26 மதுபாட்டில்களுடன் வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் மது விற்ற, கனிராவுத்தர்குளம் காந்திநகர் நவீன், 44, கோவிந்தராஜ், 82; ஈரோடு பெரியார் நகர் பகுதியில் மது விற்ற அசோகபுரி நந்தகுமார், 39, ஒடைப்பள்ளத்தை சேர்ந்த சத்திவேல், 28; முத்தம்பாளையம் பகுதியில் மது விற்ற சங்கர், 71, ஆகியோரை போலீசார் கைது செய்து, 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதவிர மாவட்டம் முழுவதும் மது விற்றதாக, 35 பேர் கைது செய்யப்பட்டு, 377 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
