ADDED : ஆக 10, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட போலீசார் மூலம் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடையே போதையால்ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்து கூறி, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
மேலும் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், இதுவரை மாவட்டத்தில் இந்தாண்டு, 690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
770 பேர் கைது செய்யப்பட்டனர். 294.915 கிலோ கஞ்சா, போதை மாத்திரை, 1,427, மெத்தபேட்டமைன், 0.151 கி.கி., மற்றும் 4,246.260 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 424 பேருக்கு நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. 15 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என, போலீசார்
தெரிவித்தனர்.

