ADDED : ஜூன் 17, 2025 01:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஜூன் 17
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்தாண்டு, 10ம் வகுப்பு படித்த 4,799 மாணவ, மாணவிகள் மாவட்டத்தில், தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வை எழுதினர். இதில் வெற்றி பெறுவோருக்கு ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் என, இளநிலை பட்டப்படிப்பு
வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கடந்த ஜன.,25ல் நடந்த தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 4,799 பேரில், 27 மாணவர், 17 மாணவியர் என, 44 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் ஆறாவது இடம் பிடித்தது.
