/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நள்ளிரவில் கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் காரில் சென்ற 5 பேர் ஈரோட்டில் சுற்றிவளைப்பு
/
நள்ளிரவில் கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் காரில் சென்ற 5 பேர் ஈரோட்டில் சுற்றிவளைப்பு
நள்ளிரவில் கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் காரில் சென்ற 5 பேர் ஈரோட்டில் சுற்றிவளைப்பு
நள்ளிரவில் கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் காரில் சென்ற 5 பேர் ஈரோட்டில் சுற்றிவளைப்பு
ADDED : மே 29, 2025 01:55 AM
ஈரோடு ஈரோட்டில், கூட்டு கொள்ளையடிக்க, நள்ளிரவில் காரில் ஆயுதங்களுடன் சென்ற பழங்குற்றவாளிகள், ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, கொல்லம்பாளையம் மாநகராட்சி ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளி முன் கடந்த, 27 இரவு 12:00 மணிக்கு மேல், ஈரோடு எஸ்.பி., சுஜாதா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். வாகன தணிக்கையிலும் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் வந்த ஸ்விப்ட் டிசையர், 'ரெட் டாக்சி' காரை நிறுத்தி சோதனை செய்தார். காரில் உருட்டை கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அவர்களை பிடித்து விசாரித்தார். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர்.
ஈரோடு சூரம்பட்டி போலீசாரை அழைத்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில், காரில் வந்தது ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியை சேர்ந்த டிரைவர் சிவானந்தம், 23, நேரு வீதியை சேர்ந்த டிரைவர் விக்னேஸ்வரன், 29, மதுரையை கூலி தொழிலாளி கண்ணன், 28, அசோகபுரம் தீரன் சின்னமலை வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாரதி, 29, வீரப்பன்சத்திரம் கலைமகள் வீதியை சேர்ந்த முகமது இஸ்மாயில், 33, என்பது தெரியவந்தது. ஐந்து பேரும் சேர்ந்து, கூட்டு கொள்ளையடிக்க தேவையான முன்னேற்பாடுகளுடன் ஆயத்தமாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
பாரதி மீது ஈரோடு கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரத்தில் தலா மூன்று வழக்கு, இஸ்மாயில் மீது மசினகுடியில் ஒரு வழக்கு, கண்ணன் மீது மதுரை திருமங்கலம் பகுதியில் இரு வழக்கு, விக்னேஸ்வரன் மீது வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையத்தில் தலா ஒரு வழக்கு, சிவானந்தம் மீது வெள்ளோட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சிறையில் இருந்த போது ஒருவருக்கு ஒருவர் பழக்கம் ஏற்பட்டு, அந்த நட்பின் அடிப்படையில் கூட்டுக்கொள்ளையடிக்க திட்டமிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.