ADDED : ஜூன் 08, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
டி.என்.பாளையம்:டி.என்.பாளையத்தை
அடுத்த கே.என்.பாளையம் அருகே நரசாபுரத்தில் சூதாட்டம் நடப்பதாக
கிடைத்த தகவலின்படி பங்களாப்புதுார் போலீசார் சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது சீட்டாடிய கும்பலை சுற்றி வளைத்தனர்.
நரசாபுரம்
பொம்மன், 63, பெரியசாமி, 43, பெரியான் 39; கே.என்.பாளையம் பெரியசாமி
கோவில் வீதி ஆண்டி, 49, வெங்கடாசலம், 45, என ஐந்து பேரை கைது செய்து,
4,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
