தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பேராசிரியையின் கணவர் உள்பட 5 பேர் விபரீத முடிவு

பேராசிரியையின் கணவர் உள்பட 5 பேர் விபரீத முடிவு

பேராசிரியையின் கணவர் உள்பட 5 பேர் விபரீத முடிவு


ADDED : ஜூலை 01, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாநகரில், பேராசிரியையின் கணவர் உள்பட ஐந்து ஆண்கள், தற்கொலை செய்து கொண்டனர்.

ஈரோடு நாடார்மேடு விக்னேஷ் நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு, 47; பைனான்ஸ் தொழில் செய்தார். இவர் மனைவி சுபப்பிரியா, 40; கோவை தனியார் கல்லுாரி பேராசிரியை. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பிரபுவுக்கு பைல்ஸ் பிரச்னையால் ஒரு வாரத்துக்கு முன் பெருந்துறை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், தண்டுவடம், கண் நரம்பில் வலி இருப்பதாக பிரபு கூறியுள்ளார். 29ம் தேதி காலை சுப பிரியா வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த பிரபு, வேஷ்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

* ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்தி நகர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன், 40; இவர் மனைவி சுகன்யா, 35; தம்பதிக்கு 2 மகள் உள்ளனர். மணிகண்டன் மது பழக்கம் உடையவர். இதனால் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 10 ஆண்டாக பிரிந்து வாழ்ந்தார். ஒரு மாதத்துக்கு முன் தான் -மனைவியுடன் சேர்ந்து வாழ துவங்கினர். கடந்த, 27ல் சுகன்யா, மகள்களுடன் ஊருக்கு சென்றிருந்தார். மணிகண்டன், 28ல் மது போதையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

* ஈரோடு வீரப்பன்சத்திரம் சரோஜினி நகர் டவர் லைன் பகுதியை சேர்ந்தவர் செந்தில், 46; திருமணம் ஆனவர். ஓராண்டாக தம்பி இறந்த துக்கத்தில் துாக்கம் வராமல் தவித்துள்ளார். இதற்காக மாத்திரை சாப்பிட்டுள்ளார். கடந்த, 29ம் தேதி அதிகாலை மூச்சு விட சிரமமாக இருப்பதாக மனைவி ரேவதியிடம் தெரிவித்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஈரோடு நாராயணவலசு திருமால் நகர் நாகேஸ்வரன்-மைனாவதி தம்பதி மகன் யோகேஷ்வரன், 31; திருமணம் ஆகாதவர். ஈரோடு நியூ டீச்சர்ஸ் காலனியில் புட் மிஷின் இண்டஸ்ரி நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றினார். 10 ஆண்டாக சர்க்கரை, வலிப்பு நோய் இருந்தது. மருந்து, மாத்திரை சாப்பிட்டார். ஆறு மாதமாக மருந்து, மாத்திரை சாப்பிடாமல் மது குடித்து வந்துள்ளார். கடந்த, 27ல் வேலைக்கு சென்றார். மதியம் நிறுவனத்தில் சாப்பிட்டு விட்டு நடந்து செல்லும் போது வலிப்பு ஏற்பட்டு விழுந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, 29ல் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் வீதி பாரதி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார், 60; திருமணம் ஆகாதவர். தாய், சகோதரனுடன் வசித்தார். சர்க்கரை நோயால் கால் விரல் ஒன்றை டாக்டர்கள் எடுத்துள்ளனர். கண் புரை ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். நோய் குணமாகாததால் விரக்தியில் இருந்தார். 29ம் தேதி மதியம் வீட்டில் யாருமில்லாத போது கயிற்றால் துாக்கிட்டு

தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு தாலுகா போலீசார்

விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us