ADDED : மார் 11, 2026 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தாராபுரம் நகராட்சி முதலாவது வார்டை அடுத்த பைபாஸ் சாலையில், காலி குடங்களுடன், நேற்று மாலை சாலை மறியல் நடந்தது.
இதுகுறித்து
மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் குடிநீர்
தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. நகராட்-சியில் முறையிட்டால்
உரிய நடவடிக்கை இல்லை. இன்று தண்ணீர் விட நட நடவடிக்கை எடுப்பதாக
கூறியும் மாலை வரை வராததால் மறியலில் ஈடுபட்டோம் இவ்வாறு கூறினர்.
தகவலறிந்து சென்ற தாராபுரம் போலீசார், மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள்
கட்சி நகர தலைவி செல்வராணி உள்பட ஐந்து பேரை கைது செய்தனர்.

