ADDED : ஏப் 23, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;கொடுமுடி
அடுத்த வெள்ளோட்டம்பரப்பு, அரிக்காரன் காட்டூர் ரோடு
வசந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 67, விவசாயி. தன் வீட்டின் அருகே,
7 ஆடுகளை பட்டி போட்டு வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை
பட்டிக்குள் புகுந்த தெரு நாய்கள், ஆடுகளை கடித்துள்ளன.
இதில், 5
ஆடுகள் பலியாகின. 2 ஆடுகள் நல்ல நிலையில் உள்ளன. தகவல் அறிந்த கிராம
நிர்வாக அலுவலர், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்து, தெரு நாய்கள்
கடித்ததில் ஆடுகள் இறந்ததை உறுதி செய்தார். கால்நடை மருத்துவர்களை
கொண்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டன. தெரு
நாய்கள் கடித்ததில் ஆடுகள் இறந்தது, அப்பகுதி கால்நடை வளர்ப்போரை
அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
