/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெளிநாடு சுற்றுலா செல்ல 5 மாணவ, மாணவியர் தேர்வு
/
வெளிநாடு சுற்றுலா செல்ல 5 மாணவ, மாணவியர் தேர்வு
ADDED : டிச 04, 2025 05:57 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடந்த கலை திருவிழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற ஐந்து மாணவ, மாணவியர் வெளிநாடு சுற்றுலா செல்ல தேர்வாகி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான கலை திருவிழா போட்டி பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் நடந்தது. இறுதியாக மாநில அளவில் நடந்தது. இதில் வெற்றி பெறும் மாணவ,மாணவியர் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என, ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதன்படி 2024-25ம் ஆண்டில் மாநில அளவிலான கலை திருவிழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் விபரம்:
பிளஸ் 2 பயிலும் கனிகாஸ்ரீ, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர். ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி.குமலன்குட்டை அரசு பள்ளி மாணவர் யோகித் ரிஷி. பெருந்துறை அரசு மகளிர் பள்ளி 8ம் வகுப்பு மாணவி அனுஜாஸ்ரீ, பவானியை சேர்ந்த ஹரிவர்ஷன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த நிதர்சனாஷா ஜி. ஆகிய ஐந்து பேர் வெளிநாடு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் பாஸ்போர்ட், விசா பெற்றவுடன் அரசு சார்பில் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

