ADDED : ஜன 12, 2026 07:32 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு-பவானி சாலையில், கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்பனை செய்த ஐந்து பேரை பிடித்தனர்.
விசாரணையில் கருங்கல்பா-ளையம் நாகராஜ், 29. அஜித், 26, பிரகாஷ், 19; நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜீவானந்தம், 19, அருண்குமார், 24, என தெரிய வந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, 200 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
