/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட நீச்சல் போட்டி 500 மாணவர்கள் பங்கேற்பு
/
மாவட்ட நீச்சல் போட்டி 500 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 15, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பாரதியார் தின விளையாட்டு போட்டி, கடந்த மாதம் தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, சேலம் காந்தி மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் நீச்சல் போட்டி நேற்று நடந்தது.
4 வகை நீச்சலில், 200, 400, 600, 800, 1,500 மீ., என, 25க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நடந்த போட்டிகளில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் மாணவியருக்கு நடந்த நீச்சல் போட்டியில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும், 240 பேர், மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.