/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
14 வயது சிறுமியிடம் அத்துமீறல் 52 வயது தொழிலாளிக்கு காப்பு
/
14 வயது சிறுமியிடம் அத்துமீறல் 52 வயது தொழிலாளிக்கு காப்பு
14 வயது சிறுமியிடம் அத்துமீறல் 52 வயது தொழிலாளிக்கு காப்பு
14 வயது சிறுமியிடம் அத்துமீறல் 52 வயது தொழிலாளிக்கு காப்பு
ADDED : ஆக 03, 2025 01:21 AM
பெருந்துறை, :அசாம் மாநிலத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி, தாய், தம்பியுடன் பெருந்துறை சிப்காட் அருகில் குடியிருந்து வருகிறார்.
தொலைக்காட்சி பார்ப்பதற்காக, பக்கத்து வீட்டில் வசிக்கும் சங்கர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சிறுமியிடம் தவறான தொடுகையில் ஈடுபட்டு, வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். நண்பர்களுக்கும் வீடியோவை காட்டியுள்ளார். இதைப்பார்த்த ஒருவர், பெண்கள் உதவி மைய எண்-181-க்கு தகவல் கொடுத்துள்ளார். பெண்கள் உதவி மைய அலுவலர் விசாரித்து, குழந்தைகள் உதவி நல மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். குழந்தைகள் நல அலுவலர் சுஜாதா, பெருந்துறை போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் சங்கரை, 52, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சங்கரின் சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, கிழக்கு சக்கரைகோட்டை. சிப்காட் அருகில் மனைவி, 25 வயது மகன், 19 வயது மகளுடன் வசித்தபடி, சிப்காட்டில் லோடுமேனாக வேலை செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.