ADDED : மே 26, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் கடும் மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஈரோட்டில்- 54.4 மி.மீ., மழை பதிவானது.
பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): இலந்தைகுட்டைமேடு-43.6, அம்மாபேட்டை-38.8, தாளவாடி-36.4, சென்னிமலை-33, கோபி-25.4, சத்தியமங்கலம்-21, பவானிசாகர் அணை- 14.8, கொடுமுடி-13.8, வரட்டுப்பள்ளம் அணை-13.4, நம்பியூர்-12, பவானி-11, மொடக்குறிச்சி-10, பெருந்துறை-7, குண்டேரிப்பள்ளம் அணை-7, கவுந்தப்பாடி-6.8, கொடிவேரி அணை-3 மி.மீ., அதேசமயம் நேற்று வழக்கம்போல கடும் வெயில் வாட்டியது.
