ADDED : மார் 02, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பார்சல் அலுவ-லகம் பின்புறம், ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு ஒரு பார்சல் கிடந்தது. எடுத்து பிரித்து பார்த்தபோது ஐந்தரை கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 2.75 லட்சம் ரூபாய். ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, போலீசார் சோதனையை அறிந்து வீசி சென்றிருக்கலாம் என தெரிகிறது. போலீசார் கஞ்சாவை கைப்பற்றினர்.
