ADDED : மார் 31, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களில், நடப்பாண்டு விழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்து வருகிறது. கோட்டை இந்தியன் நண்பர்கள் குழு சார்பில், 35வது ஆண்டாக நேற்று பால்குடம் ஊர்வலம் நடந்தது.
இதில், 555 பெண்கள் பால்குடம் சுமந்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர். ஈஸ்வரன் கோவில் முன்பாக துவங்கி, டி.வி.எஸ் வீதி, பன்னீர் செல்வம் பார்க் வழியாக பெரிய மாரியம்மன் கோவிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது.
