ADDED : நவ 22, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார், வெற்றி நகர், வாய்க்கால் கரையோரம் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருந்த, ஈரோடு வெங்கடபெருமாள் கோவில் வீதி ஷாஜித் அஹமதுவை, 25, பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
* விஜயமங்கலம் அருகே கள்ளியம்புதுாரில், சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெருந்துறை போலீசார் சோதனையில் கள்ளியம்புதுார் முத்து நகரில் ஒரு வீட்டு பின்புறம் சூதாடிய அதே பகுதியை சேர்ந்த ஜான் பீட்டர், 45, அமல்ராஜ், 43, சேவியர், 43, நடராஜ், 44, குமார், 50, கிருஷ்ணன், 47, ஆகியோரை கைது செய்தனர்.

