ADDED : ஆக 10, 2025 01:03 AM
ஈரோடு, ஈரோடு மதுவிலக்கு போலீஸ் எஸ்.ஐ., துளசிமணி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ஈரோடு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் உள்ள, பிளாட்பார்ம்களில் சோதனை நடத்தினர். இதில், 2வது பிளாட்பார்மில் ரோந்து சென்றபோது, அங்கு இருந்த பொது கழிப்பறை அருகே கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பையில் இருந்த, 3.200 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, கடத்தி வந்த நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
* பெரிய சேமூர் ஈ.பி.பி., நகர் பிரிவு அருகே, ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். ஸ்கூட்டரில் 2.800 கிலோ கஞ்சா கடத்தி சென்று விற்க வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் செந்தில்குமார், 36, என்பவரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.