தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 6 ஊராட்சி செயலர் பணியிட மாற்றம்

6 ஊராட்சி செயலர் பணியிட மாற்றம்

6 ஊராட்சி செயலர் பணியிட மாற்றம்


ADDED : ஆக 06, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ன்னிமலை:கிராம ஊராட்சிகளில் நிர்வாக நலன் கருதி, 6 ஊராட்சி செயலர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கி, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பழனிச்சாமி, முகாசிப்பிடாரியூர் ஊராட்சியிலிருந்து, கவுண்டிச்சிபாளையம் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லலிதா, எக்கட்டாம்பாளையம் ஊராட்சியிலிருந்து கூத்தம்பாளையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு சிறுகளஞ்சி ஊராட்சி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரநாதன், கூத்தம்பாளையம் ஊராட்சியிலிருந்து முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்கும், குருவன், கவுண்டிச்சிபாளையம் ஊராட்சியிலிருந்து கொடுமணல் ஊராட்சிக்கும், கோமதி, கொடுமணல் ஊராட்சியிலிருந்து எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முருங்கத்தொழுவு ஊராட்சி செயலராக பணிபுரியும் நாகராஜூக்கு, முகாசிபுலவன்பாளையம் ஊராட்சி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us