/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடியிருப்பு பகுதியில் சிக்கிய 6 பாம்புகள்
/
குடியிருப்பு பகுதியில் சிக்கிய 6 பாம்புகள்
ADDED : ஜூலை 27, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு சாஸ்திரி நகர் குடியிருப்பு பகுதியில் சாரை பாம்பு, மூன்று மாதங்களாக சுற்றித்திரிந்தது.
பல முறை அதனை பிடிக்க முயன்றும் தப்பியது. நேற்று முன்தினம் வீட்டின் சுற்றுச்சுவரின் அடியில் பதுங்கியதை அப்பகுதியினர் கவனித்தனர். தகவலின்படி சென்ற ஈரோட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரர் யுவராஜா, 30 நிமிடம் போராடி, 11 அடி நீள சாரை பாம்பை பிடித்தார். அது-போல நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ஈரோட்டில் கொம்-பேரி மூக்கன், பச்சை பாம்பு என குடியிருப்பு பகுதியில் மட்டும் ஆறு பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்-கப்பட்டன.

