ADDED : ஜன 09, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமி-ழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, விவசாயிகள் மாடு-களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 20,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 23,000 முதல், 75,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 60,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலுமான கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பொங்கல் பண்டிகை வருவதால், விவசா-யிகள், வியாபாரிகள் ஆர்வமாக மாடுகள் மற்றும் கன்றுகளை வாங்கி சென்றனர். வரத்தானது மாடுகளில், 90 சதவீதம் விற்ப-னையானது.
