தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விற்பனைக்கு வந்த 650 மாடுகள்

விற்பனைக்கு வந்த 650 மாடுகள்

விற்பனைக்கு வந்த 650 மாடுகள்


ADDED : செப் 27, 2024 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விற்பனைக்கு வந்த 650 மாடுகள்

ஈரோடு, செப். 27-

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்தனர். இதில், 6,000 ரூபாய் முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள்; 20,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; 22,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள்; 75,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகள், 50 என விற்பனைக்கு வந்திருந்தன.

தற்போது விவசாய பணி நடந்து வருவதால், அதிகமாக மாடுகளை அழைத்து வந்திருந்தனர். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வமாக மாடுகளை வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us