ADDED : செப் 27, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வந்தனர். இதில், 6,000 ரூபாய் முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள்; 20,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; 22,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள்; 75,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகள், 50 என விற்பனைக்கு வந்திருந்தன.
தற்போது விவசாய பணி நடந்து வருவதால், அதிகமாக மாடுகளை அழைத்து வந்திருந்தனர். தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் ஆர்வமாக மாடுகளை வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்றன.