/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடமாடும் ஆம்புலன்ஸ்களால் 6,531 கால்நடைகளுக்கு சிகிச்சை
/
நடமாடும் ஆம்புலன்ஸ்களால் 6,531 கால்நடைகளுக்கு சிகிச்சை
நடமாடும் ஆம்புலன்ஸ்களால் 6,531 கால்நடைகளுக்கு சிகிச்சை
நடமாடும் ஆம்புலன்ஸ்களால் 6,531 கால்நடைகளுக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 13, 2025 01:58 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் நடமாடும் ஆம்புலன்ஸ்களால், 6,531 கால்நடைகளுக்கு இதுவரை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தொலைதுார கிராமங்களில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க, நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தாலுகாவுக்கு ஒரு வாகனம் வீதம், ௧௦ தாலுகாக்களில், ௧௦ வாகனம் கடந்த ஆண்டு செப்., முதல் செயல்படுகிறது. இந்த வாகனத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற, 1962 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிகிச்சை கிடைக்கும்.
இவ்வாகன சிகிச்சை குறித்து, ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் பாஸ்கர் கூறியதாவது: அழைக்கும் இடங்களுக்கு சென்று சிகிச்சை வழங்குவதுடன், முகாமும் நடத்தி சிகிச்சை வழங்குகிறோம். கடந்த ஜூன் மாதம் மட்டும், 120 கிராமங்களில், 424 மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதுபோன்ற முகாம், பிற சிகிச்சை மூலம், 6,531 கால்நடைகளுக்கு இதுவரை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.