/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேவை மையத்தில் 666 புகார்களுக்கு தீர்வு
/
சேவை மையத்தில் 666 புகார்களுக்கு தீர்வு
ADDED : டிச 19, 2025 07:57 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் கடந்த, 2019 ஆக., முதல் பெருந்துறை சானிடோரியத்தில் உள்ள, ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செயல்படுகிறது.
வீட்டில், தனிப்பட்ட இடத்தில், பொது இடத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான சட்ட ரீதியான உதவிகள், மருத்துவ உதவிகள், காவல் துறை உதவிகள், உளவியல் ரீதியான ஆலோசனை, தற்காலிக தங்கும் வசதி, அனைத்து நாட்களும், அனைத்து நேரமும் இம்மையம் முலம் செய்து தரப்படுகிறது.
கடந்த, ஜன., முதல் நவ., வரை மாவட்டத்தில் பெண்களிடம் இருந்து கட்டணமில்லா தொலைபேசி எண்-181 மூலம், 666 புகார் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

