/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாக்காளர் தீவிர திருத்தப்பணி துவக்கம் பணியில் 6,820 ஓட்டுச்சாவடி நிலை முகவர்

ADDED : நவ 05, 2025 12:53 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி துவங்கியது.
ஈரோடு கலெக்டர் கந்தசாமியின் முகாம் அலுவலகத்தில், கிழக்கு தொகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்கி, பூர்த்தி செய்து பெற்றார். பின், பிற இடங்களில் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்து கூறியதாவது:
நவ., 4 முதல் டிச., 4 வரை சிறப்பு தீவிர திருத்தம் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடிகளுக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணியை மேற்பார்வை செய்ய, ஒவ்வொரு மேற்பார்வையாளருக்கும், 10 ஓட்டுச்சாவடி வீதம், 226 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பி.எல்.ஒ., - பி.எல்.ஓ., சூப்பர்வைசர், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் இதுவரை நியமிக்கப்பட்ட, 6,820 ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கு, தீவிர திருத்த பயிற்சி தரப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பில், வாக்காளர் எந்த ஆவணத்தையும் சமர்பிக்க தேவையில்லை. படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப சமர்பிக்காத வாக்காளர் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. கணக்கெடுப்புக்கு பின், வரைவு வாக்காளர் பட்டியல், டிச., 9 ல் வெளியிடப்படும். இவ்வாறு கூறினார்.