நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் கொளந்தையம்மாள் வீதியை சேர்ந்தவர் சிவா, 30; இவரிடம், 3 கிலோ கஞ்சாவை, வீரப்பன்சத்திரம் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
இதேபோல் கஞ்சா வைத்திருந்த சேலம் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஜரின் சுபாஷ் கரன், 47; கோவை ஒண்டிபுதுார் கார்த்தி, 27; அறச்சலுார் கூத்தம்பூண்டியை சேர்ந்த, 18 வயது சிறுவன்; அறச்சலுார் வடுகபட்டி கொங்குநகர் மதன், 21; அறச்சலுார் அண்ணா நகரை சேர்ந்த, 18 வயது சிறுவன்; அறச்சலுார் கூத்தம்பூண்டி நாச்சிவலசை சேர்ந்த, 18 வயது சிறுவன் என ஆறு பேரை அறச்சலுார் போலீசார் கைது செய்தனர்.

