/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 7 பேர் கைது
/
பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 7 பேர் கைது
ADDED : ஜன 06, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை போலீசார், நேற்று அதிகாலை பெருந்துறை, ஈரோடு ரோடு, வாய்க்கால் மேடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது நடந்து வந்த ஏழு பேரை பிடித்து விசாரித்தனர்.
அனைவரும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், பெருந்துறை அருகே பணிக்கம்பாளையம் பகுதியில், 15 ஆண்டு-களாக தங்கி, வெல்டிங் மற்றும் கட்டட வேலைக்கு சென்று வரு-வதும் தெரிய வந்தது. ஆனால், உரிய ஆவணங்கள், அனுமதி இல்லை. இதனால், 22 வயது முதல் 48 வயது வரையிலான ஏழு பேரையும் கைது செய்தனர். பெருந்துறை நீதிமன்றத்தில் ஏழு பேரையும் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சென்னை புழல் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர்.

