/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யூரியா கலந்த தண்ணீரை குடித்த 7 பசு மாடுகள் பலி
/
யூரியா கலந்த தண்ணீரை குடித்த 7 பசு மாடுகள் பலி
ADDED : ஜன 29, 2026 04:35 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே, காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கிடுசாமி, 50; விவசாயி. கால்நடைகளை வளர்த்து வருகிறார். இதில், ஏழு ஜெர்சி மாடுகள் இருந்தன. இரண்டு ஏக்கர் தோட்டத்தின் ஒரு பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். நேற்று காலை, அங்-குள்ள தண்ணீர் தொட்டியில், சோளப்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச, யூரியா உப்பை கலந்து கரைத்து வைத்திருந்தார். அப்போது, தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த, ஏழு மாடுகளும், யூரியா கலந்த தண்ணீரை குடித்தன.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கிடுசாமி, மாடுகளை தொழுவத்தில் கட்டிவைத்துவிட்டு, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி, தடுப்பு மருந்து வாங்கி வந்து ஊற்றியுள்ளார். அப்போது, ஒன்றன் பின் ஒன்றாக மாடுகள் மயங்கி விழுந்த மடிந்தன. அந்தியூர் வருவாய்த்துறையினர், கால்நடைத்துறை-யினர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். உயிரிழந்த பசுக்-களின் மதிப்பு, 4.50 லட்சம் ரூபாயாகும். இச்சம்பவம், விவசாயி-களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

