ADDED : நவ 16, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு எமெர்ஜன்சி கேர் மருத்துவமனை அருகே, சிலர் பணம் வைத்து சூதாடுவதாக, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் நேற்று முன் தினம் மாலை சென்றனர். அங்கு சூதாடிய ஏழு பேரை வளைத்து பிடித்தனர். அவர்களிடம், 4,800 ரூபாயை கைப்பற்றினர்.
ஈரோடு நாராயணவலசு டவர் லைன் காலனி ராஜேந்திரன், 43; சூரம்பட்டி கிராமடை பிரவீன்குமார், 42; சூரம்பட்டி வலசு சாஸ்திரி நகர் சதீஷ்குமார், 34; வீரப்பன்சத்திரம் கொத்துகாரர் தோட்டம் நந்தகோபால், 35; ஈரோடு டீச்சர்ஸ் காலனி கோவலன் வீதி ஆல்வின், 34; ஈரோடு அணைகட்டு ரோடு எம்.எஸ்.கே.நகர் சதீஷ், 44, என ஏழு பேரை கைது செய்தனர்.

