ADDED : மே 16, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
கோபி:ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், செங்கோட்டையன் முன்னிலையில், த.வெ.க.,வில் இணைந்தார்.
அவருடன் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில், ராமலிங்கம் தலைமையில் நேற்று மாலை இணைந்தனர். அனைவருக்கும் செங்கோட்டையன் கட்சி துண்டு அணிவித்தார்.
