முதல் நாளில் 7,050 கால்நடைகளுக்கு செலுத்தப்பட்ட கோமாரி நோய் தடுப்பூசி
முதல் நாளில் 7,050 கால்நடைகளுக்கு செலுத்தப்பட்ட கோமாரி நோய் தடுப்பூசி
ADDED : ஜூலை 02, 2026 04:20 AM

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் துவங்கியது.
ஈரோடு
மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,கள், கிராம
பகுதியிலும் நேற்று, 9வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி,
கால்நடைகளுக்கு செலுத்தும் முகாம் துவங்கியது. முதல் நாளான நேற்று,
90 மையங்களில் தடுப்பூசி செலுத்தினர். நசியனுார் டவுன் பஞ்.,
தொட்டிபாளையம் கிராமத்தில், ஈரோடு கால்நடை பராமரிப்பு துறை மண்டல
இணை இயக்குனர் முருகன் தலைமையில், ஈரோடு மேற்கு தொகுதி த.வெ.க., -
எம்.எல்.ஏ., ஆனந்த்மோகன் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
உதவி
இயக்குனர்கள் கண்ணன், சக்திவேல், செல்வராஜ், திருவேங்கடம், கால்நடை
டாக்டர்கள் தனராஜம், சவுமியா, மகுடீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மண்டல இணை இயக்குனர் முருகன் கூறுகையில்,''கால்நடை வளர்ப்பில் கோமாரி நோய் தாக்கம், விவசாயி
களுக்கு
பெரிய அளவில் பொருளாதாரம், உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும். கறவை
மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின்
வேலைத்திறன் குறையும். கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க,
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவசமாக தடுப்பூசி
செலுத்தப்படுகிறது. இந்தாண்டு மாவட்ட அளவில், 2 லட்சத்து, 84,300
கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று, 90 மையங்களில், 7,050
கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது,'' என்றார்.
