ADDED : ஆக 28, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சத்தியமங்கலத்தில்
உள்ள சிறப்பு இலக்கு படை (எஸ்.டி.எப்.,) தொழில் நுட்ப பிரிவில்
பயன்படுத்தப்பட்ட, 72 சார்ஜர்கள் பழுதடைந்தது. அவற்றை கழிவு
நீக்கம் செய்ய செப்., 9ம் தேதி காலை 10:00 மணிக்கு, சத்தியமங்கலம்
சிறப்பு இலக்கு படை முகாம் வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில்
அரசு விதிகளின் வழிகாட்டுதலுக்கு இணங்க, இ.வேஸ்ட் ரீசைகிளர்ஸ் தகுதி
சான்று உள்ள நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். ஏல
தினத்தன்று காலை 500 ரூபாய் முன் வைப்பு தொகை செலுத்தி முன்பதிவு செய்ய
வேண்டும். ஏலத்தில் பங்கேற்று கழிவு பொருட்களை ஏலம்
எடுத்தவர்கள், ஏல தொகை முழுவதையும் மற்றும் அப்பொருட்களுக்கு
உண்டான ஜி.எஸ்.டி. தொகையுடன் செலுத்தி, பொருட்களை பெற்று கொள்ள
வேண்டும் என, கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
