தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/77வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்

77வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்

77வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்


UPDATED : ஜன 27, 2026 02:34 PM

ADDED : ஜன 27, 2026 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2026 02:34 PM ADDED : ஜன 27, 2026 10:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு மாவட்டத்தில், 77வது குடியரசு தின-விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்-டது.

ஈரோடு மாவட்டம் சார்பில், ஆணைக்கல்பா-ளையம் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. கலெக்டர் கந்தசாமி தேசியக்-கொடியை ஏற்றினார். அவருடன் எஸ்.பி., சுஜாதா இருந்தார். போலீசாரின் அணிவகுப்பு மரியா-தையை கலெக்டர் ஏற்றார். பிறகு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப்-பட்டனர். பல்வேறு அரசு துறை ஊழியர்கள், 141 பேருக்கு சிறந்த பணிக்கான பாராட்டு சான்றி-தழை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் பல்-வேறு துறைகள் சார்பில், 30 நபர்களுக்கு, ஒரு கோடியே 28 லட்சம்

ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. ஏழு பள்ளிகளை சேர்ந்த, 562 மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது.

தியாகியின் வாரிசுசாலை வசதி கேட்டு மனு

விழாவில் கலந்து கொண்ட, சுதந்திர போராட்ட தியாகியின் வாரிசுகளில் ஒருவரான, சென்னி-மலை முகாசி பிடாரியூரை சேர்ந்த ருக்மணி, 70, கலெக்டரிடம் கூறியதாவது:எங்கள் ஊரில் சாலை வசதி சரிவர இல்லை. இதற்காக, 30 ஆண்டாக கோரிகேகை விடுத்து வருகிறோம் என்றார். ஆவண செய்வதாக கலெக்-டர் உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us