/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
780 கிலோ தரமில்லாத நெல் விதை அரிசி ஆலைக்கு அனுப்ப உத்தரவு
/
780 கிலோ தரமில்லாத நெல் விதை அரிசி ஆலைக்கு அனுப்ப உத்தரவு
780 கிலோ தரமில்லாத நெல் விதை அரிசி ஆலைக்கு அனுப்ப உத்தரவு
780 கிலோ தரமில்லாத நெல் விதை அரிசி ஆலைக்கு அனுப்ப உத்தரவு
ADDED : ஜூலை 13, 2011 03:19 AM
ஈரோடு:தனியார் விதை விற்பனை நிலையத்தில் இருப்பில் இருந்த 780 கிலோ
தரமில்லாத நெல் விதையை, அரிசி ஆலைக்கு அனுப்ப விதை ஆய்வு துணை இயக்குனர்
மணிமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர்
மணிமொழி தலைமையில் விதை ஆய்வாளர்கள் சரவணன், பாலசுப்பிரமணி ஆகியோர் அடங்கிய
குழுவினர் கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம் தாலுகாவில் உள்ள விதை
விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஒரு தனியார் விதை
விற்பனை நிலையத்தில் இருப்பில் இருந்த 17 ஆயிரத்து 178 ரூபாய் மதிப்பிலான
780 கிலோ தரக்குறைவான நெல் விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை அரிசி ஆலைக்கு
அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும், முறையான ரசீது வழங்காத, விதை
இருப்பு விலை விவர பலகை வைக்காத, ஆவணங்கள் பராமரிக்காத தனியார் விதை
விற்பனை நிலையத்தின் விதை வணிகம் முடக்கம் செய்யப்பட்டது.நடப்பு ஆண்டில்
இதுவரை கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் பகுதிகளில் நெல், மக்காச்சோளம்,
பயறுவகை, காய்கறி விதைகளில் 184 மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனை
நடத்தப்பட்டதில் ஒரு மாதிரி மட்டும் தரக்குறைவானதாக கண்டறியப்பட்டு,
அவ்விதை உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் மீது கோபிசெட்டிபாளையம்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த 2010-2011ல் 736 விதை
மாதிரிகள் எடுக்கப்பட்டதில், ஐந்து மாதிரிகள் மட்டுமே தரக்குறைவானது என,
கண்டுபிடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.விதை விற்பனை உரிமையாளர்கள், விதை விற்பனை
செய்யும்போது, உரிய விற்பனை ரசீதை விவசாயிகளுக்கு கண்டிப்பாக வழங்க
வேண்டும்.
அதில், வாங்குபவர் கையெழுத்து பெற வேண்டும் என்று அறிவுரை
வழங்கப்பட்டுள்ளது.இத்தகவலை விதை ஆய்வு துணை இயக்குனர் மணிமொழி
தெரிவித்துள்ளார்.

