ADDED : நவ 06, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, வேலாம்பாளையம் பகுதியில், கவுந்தப்பாடி போலீசார் கடந்த, 3ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள ரிசார்ட்டில், கும்பலாக ஒரு கும்பல் சூதாடியதாக போலீசார் கைது செய்தனர்.
அந்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 50, கவுந்தப்பாடியை சேர்ந்த ராயப்பன், 50, சேகர், 45, பாலசுப்பிரமணியம், 55 உள்பட, எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.61 லட்சம் ரூபாய், மூன்று ஸ்கூட்டிகளை பறிமுதல் செய்தனர்.

