ADDED : நவ 19, 2026 06:15 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் பொது இடத்தில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும்
இடையூறு ஏற்படுத்தும் வகையில் மது குடித்ததாக நேற்று முன்தினம் 6
பேரை போலீசார் கைது செய்தனர்.
கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த
அசோக்குமார், 33, கிருஷ்ணம்பாளையம் சாலையில் பாட்டில் குடோன் அருகே,
நேற்று முன்தினம் காலை, 9 மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்க
வைத்திருந்தார். அவர் மீது ஈரோடு மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து
கைது செய்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல்,
கருங்கல்பாளையம் மாதவ கிருஷ்ணா வீதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன், 49,
அகில்மேடு 6வது வீதி மகாலட்சுமி டிரேடர்ஸ் எதிரே உள்ள காலி இடத்தில்,
மதுபான பாட்டில்கள் அதிக விலைக்கு விற்க வைத்திருந்தார். அவர் மீது
வழக்கு பதிந்த மதுவிலக்கு போலீசார் அவரை கைது செய்தனர்.
