/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீடு புகுந்து பொருட்கள் சூறை-கொலை மிரட்டல் அரசுப்பள்ளி ஹெச்.எம்., மீது 8 பிரிவுகளில் வழக்கு
/
வீடு புகுந்து பொருட்கள் சூறை-கொலை மிரட்டல் அரசுப்பள்ளி ஹெச்.எம்., மீது 8 பிரிவுகளில் வழக்கு
வீடு புகுந்து பொருட்கள் சூறை-கொலை மிரட்டல் அரசுப்பள்ளி ஹெச்.எம்., மீது 8 பிரிவுகளில் வழக்கு
வீடு புகுந்து பொருட்கள் சூறை-கொலை மிரட்டல் அரசுப்பள்ளி ஹெச்.எம்., மீது 8 பிரிவுகளில் வழக்கு
ADDED : நவ 19, 2024 01:25 AM
வீடு புகுந்து பொருட்கள் சூறை-கொலை மிரட்டல்
அரசுப்பள்ளி ஹெச்.எம்., மீது 8 பிரிவுகளில் வழக்கு
ஈரோடு, நவ. 19-
கோபி, நாகர்பாளையம், நஞ்சப்பா நகரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மனைவி பிரபா, 48; கோபி, வண்ணாந்துறைப்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 16ல் கோபி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த, 2014ல் குடும்ப செலவுக்காக, ஈரோடு பெரியார் வீதியில் உள்ள, அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முத்து ராமசாமியிடம் வீட்டை அடமானம் வைத்து, 15 லட்சம் ரூபாய் பெற்றேன். மாதந்தோறும், 60 ஆயிரம் ரூபாய் வட்டி செலுத்தி வந்தேன். அசல், வட்டி முழுவதும் கொடுத்த நிலையில், வீட்டை எனது பெயருக்கு எழுதி தராமல் அபகரிக்க முயன்று வருகிறார். இது தொடர்பாக ஜூன், 19ல் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தேன். ஆனால், அவர் அளித்த புகாரில், என் மீது போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளேன். கடந்த, 16ல் என் வீட்டுக்கு முத்து ராமசாமியின் ஆதரவாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் வந்து பீரோ, கட்டில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோவை சூறையாடினர். என் மகள் கையை பிடித்து திருகி, மொபைல்போனை பிடுங்கி மிரட்டல் விடுத்துள்ளனர். என் வயதான அம்மாவை அடித்து மிரட்டியுள்ளனர். என்னை ஜாதி பெயரை சொல்லி திட்டி, எனக்கு, மகன், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அடித்து துரத்தினார்.
வீட்டில் உள்ள பொருட்களையும், பீரோவில் இருந்த ஒன்பது பவுன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவையுடன் மூன்று வேனில் ஏற்றி சென்றனர். முத்துராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார். கோபி போலீசார் விசாரணை நடத்தி, தலைமையாசிரியர் முத்து ராமசாமி உட்பட அவரது ஆதரவாளர்கள் மீது, எட்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், பிரபா நேற்று புகாரளித்தார். அதில், 'ஜாதி பெயரை சொல்லி திட்டி, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.