/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
8 ஓடைகளை சுத்தம் செய்யும் பணி; அமைச்சர் தொடங்கி வைத்தார்
/
8 ஓடைகளை சுத்தம் செய்யும் பணி; அமைச்சர் தொடங்கி வைத்தார்
8 ஓடைகளை சுத்தம் செய்யும் பணி; அமைச்சர் தொடங்கி வைத்தார்
8 ஓடைகளை சுத்தம் செய்யும் பணி; அமைச்சர் தொடங்கி வைத்தார்
ADDED : ஆக 23, 2024 04:31 AM
ஈரோடு: ஈரோடு மாநகர பகுதியில், எட்டு ஓடைகளை, 30 கி.மீ., துாரத்-துக்கு துார்வாரி சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.ஈரோடு, பவானி சாலை, சுண்ணாம்பு ஓடை அருகே கழிவு நீர் ஓடைகளை துார்வாரும் பணி துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேயர் நாகரத்-தினம், மாநகராட்சி ஆணையர் மணீஷ் முன்னிலை வகித்தனர்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, துார்வாரும் பணியை துவக்கி வைத்து கூறியதாவது: விரைவில் மழை காலம் துவங்க உள்ளதால், கழிவு நீருடன், மழை நீர் செல்லும்போது, ஓடையில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் தடுக்க வேண்டி உள்ளது. இதற்காக சுண்ணாம்பு ஓடை, பெரும்பள்ளம் ஓடை உட்பட, 8 ஓடைகள், 30 கி.மீ., துாரத்துக்கு முற்றிலும் துார்வாரி, சுத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது.
ஏற்கனவே மாநகர பகுதியில் வீடு, பிற கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் வடிகால், 947 கி.மீ., துாரத்-துக்கு சுத்தம் செய்யும் பணி முடிந்துள்ளது. காளிங்கராயன் வாய்க்-காலை ஒட்டிய, பேபி வாய்க்கால் முற்றிலும் புதர் மண்டியுள்ளது. இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அதையும் அவர்களிடம் கலந்துவிட்டு, துார்வாரி சுத்தம் செய்யும் பணி விரைவில் துவங்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார். அமைச்சருடன் துணை மேயர் செல்வராஜ், ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னசாமி, மாநகர செயற்பொறியாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

