அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் 8,081 மாணவ, மாணவியர் சேர்க்கை
அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் 8,081 மாணவ, மாணவியர் சேர்க்கை
ADDED : மே 29, 2026 06:07 AM
ஈரோடு,ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் ஏப்., முதலே மாணவர் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பின் பிளஸ் 1ல் அதிக மாணவ, மாணவிகள் சேர்ந்தனர்.
இதுவரை முதல் வகுப்பில் தமிழ் வழி கல்வியில், 2,264 பேர், ஆங்கில வழியில், 1,156 பேர் சேர்ந்துள்ளனர். இதேபோல் இரண்டாம் வகுப்பு தமிழ் வழியில், 51, ஆங்கில வழி, 17; மூன்றாம் வகுப்பில் தமிழ் வழி, 50, ஆங்கில வழி, 16; நான்காம் வகுப்பில் தமிழ் வழி, 41, ஆங்கில வழியில், 17 பேர் சேர்ந்துள்ளனர். ஐந்தாம் வகுப்பில் தமிழ் வழி, 36, ஆங்கில வழி, 3; ஆறாம் வகுப்பு தமிழ் வழி, 845, ஆங்கில வழி, 339; ஏழாம் வகுப்பு தமிழ் வழி, 51, ஆங்கில வழி, 91; எட்டாம் வகுப்பில் தமிழ் வழி, 67, ஆங்கில வழியில், 58 பேர் சேர்ந்துள்ளனர்.
ஒன்பதாம் வகுப்பில் தமிழ் வழி, 723, ஆங்கில வழி, 403; பத்தாம் வகுப்பில் தமிழ் வழி, 54, ஆங்கில வழியில், 15 பேர் சேர்ந்துள்ளனர். பிளஸ் 1 தமிழ் வழி, 3,892, ஆங்கில வழி, 2,991 பேர் சேர்ந்துள்ளனர். பிளஸ் 2 தமிழ் வழி, 7, ஆங்கில வழி, 15 பேர் என மொத்தமாக தமிழ் வழியில் கற்க, 8,081 பேரும், ஆங்கில வழியில் கற்க, 5,121 பேரும் சேர்ந்துள்ளனர்.
