ADDED : மார் 27, 2026 05:10 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு
அறைகளில், நேற்று முன்தினம் வரை, 819 விதிமீறல் புகார்
பதிவாகியுள்ளது.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல்
தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவில், கட்டணமில்லா
தொலைபேசி எண்: 1800 425 0424, வாட்ஸ் ஆப் குறுந்தகவல்களை, 90425
80535 என்ற எண்ணிலும், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, 0424 2267670,
2267673, 2267674, 2267675, 2267679 என்ற எண்களுடன், 24 மணி நேரமும்
புகார் அளிக்கும் வகையில் எண்கள் வெளியிடப்பட்டது.
அதுபோல,
அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் புகார் எண்
தனித்தனியாக அறிவிக்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டன. நடத்தை விதி
அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை, 819 புகார்கள் வரப்பெற்றன.
அதில்,
814 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில்,
சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் பேனர், பேனர், போர்டுகள், சுவரொட்டிகள்
என, 5,760 எண்ணிக்கையிலானவை அகற்றப்பட்டும், மறைக்கப்பட்டும்
உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
