/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் 85 பேர் கைது
/
மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் 85 பேர் கைது
ADDED : நவ 13, 2025 01:18 AM
ஈரோடு, :ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் குருநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் கண்ணன், முன்னாள் மாநில தலைவர் ராஜசேகர், நடராஜ், ராஜேந்திரன், தங்கராஜ் உட்பட பலர் பேசினர்.
அலுவலக உதவியாளருக்கு இணையாக, கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம், 15,700 ரூபாய் வழங்க வேண்டும். இறந்த மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களின் சி.பி.எஸ்., இறுதி தொகையை உடன் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். கிராம உதவியாளரில் இருந்து வி.ஏ.ஓ., பதவி உயர்வு பெற, 10 ஆண்டு கால வரையறையை, 6 ஆண்டாக விதி திருத்தம் செய்ய வேண்டும். வருவாய் துறையில் ஏற்படும் காலி பணியிடங்களில், 50 சதவீதம் கிராம உதவியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என, வலியுறுத்தினர். பின்னர், தாலுகா அலுவலகம் முன், திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்டதால், 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

