தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஒரே நாளில் 9 வழக்கு பதிவு

தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஒரே நாளில் 9 வழக்கு பதிவு

தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஒரே நாளில் 9 வழக்கு பதிவு


ADDED : ஏப் 06, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக ஒரே நாளில், ஒன்பது வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதன் விபரம்:

= ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை முன் அனுமதியின்றி கூடியதாக, ஈரோடு தெற்கு காங்., முன்னாள் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

= கோபியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க., - த.வெ.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் மீது கோபி போலீசார் தலா ஒரு வழக்குப்பதிவு.

= கவுந்தப்பாடியில் பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடித்ததாக, அ.தி.மு.க., மற்றும் த.வெ.க., மீது கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு.

= நம்பியூரில் தி.மு.க., - த.வெ.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் மீது தலா ஒரு வழக்கு, பட்டாசு வெடித்ததாக நம்பியூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us