ADDED : மார் 27, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளின் தேர்தல் பாதுகாப்பு
பணிக்காக, ஒரு கம்பெனி, அதாவது மத்திய தொழில் பாதுகாப்பு படையை
சேர்ந்த ஆண், பெண்கள், 90 பேர் வந்துள்ளனர். இவர்கள் கோபியை அடுத்த
பாரியூரில் தங்கியுள்ளனர்.
மேலும் கூடுதல் துணை ராணுவத்தினர்
வரவுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மாவட்ட தேர்தல்
பாதுகாப்பு பணிக்கு, 9 கம்பெனி துணை ராணுவப்படையினர் (810 பேர்),
தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஒரு கம்பெனி
வந்துள்ளது. அடுத்த ஏப்., 6ல் ஒரு கம்பெனி வரவுள்ளது. மீதி ஏழு
கம்பெனியினரும், 14ம் தேதிக்குள் வந்து விடுவர். தமிழக சிறப்பு காவல்
படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருவார்களா? என்பது
தெரியவில்லை. இவ்வாறு கூறினர்.
