ADDED : மார் 27, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளின் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, ஒரு கம்பெனி, அதாவது மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஆண், பெண்கள், 90 பேர் வந்துள்ளனர்.
இவர்கள் கோபியை அடுத்த பாரியூரில் தங்கியுள்-ளனர். மேலும் கூடுதல் துணை ராணுவத்தினர் வரவுள்ளனர். இது-குறித்து போலீசார் கூறியதாவது: மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, 9 கம்பெனி துணை ராணுவப்படையினர் (810 பேர்), தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டுள்ளனர். இதன்படி ஒரு கம்-பெனி வந்துள்ளது. அடுத்த ஏப்., 6ல் ஒரு கம்பெனி வரவுள்ளது. மீதி ஏழு கம்பெனியினரும், 14ம் தேதிக்குள் வந்து விடுவர். தமி-ழக சிறப்பு காவல் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வருவார்களா? என்பது தெரியவில்லை. இவ்வாறு கூறினர்.
