தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காரணமில்லாமல் சிறையில் இருக்கும் 9 நரிக்குறவர்கள்

காரணமில்லாமல் சிறையில் இருக்கும் 9 நரிக்குறவர்கள்

காரணமில்லாமல் சிறையில் இருக்கும் 9 நரிக்குறவர்கள்


ADDED : அக் 09, 2025 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை,  நரிக்குறவர் கள், 20க்கும் மேற்பட்டோர் முற்றுகை யிடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாரிடம், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை, கரியங்காட்டுதோட்டத்தில், 2023 செப்., 9ல் விவசாயி முத்துசாமி, 85, அவரது மனைவி சாமியாத்தாள், 80, ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். அவர்களது வீட்டில் இருந்து, 15 சவரன் நகை, 60,000 ரூபாய் கொள்ளை போனது.

இவ்வழக்கில் சென்னிமலையில் வசித்த நரிக்குறவர்கள், 9 பேர் உட்பட, 11 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு ஜாமின் வழங்காமலும், வழக்கை நடத்தி முடிக்காமலும் இழுத்தடிப்பதாக நரிக்குறவர்கள் கூறினர். அங்கு வந்த ஏ.டி.எஸ்.பி., விரைவாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று அவர்கள் கலைந்தனர்.

நரிக்குறவர்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் ராமசாமி, 75, அவரது மனைவி பாக்கியம்மாள், 65, ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அரச்சலுார் ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர், சிவகிரி, சென்னிமலை போன்ற இடங்களில் நடந்த கொலையை தாங்களே செய்ததாக ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது.

ஆனால், போலீசார் அதை விட்டு, சென்னிமலை கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நரிக்குறவர்களையே, குற்றவாளிகள் என கூறுகின் றனர். இவ்வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us