ADDED : மே 06, 2025 01:58 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:வெள்ளகோவிலை அடுத்த இலக்குமன்நாயக்கம்பட்டியில், காமாட்சியம்மன் கோவிலில் கிடா விருந்து நடந்தது. இதில் பங்கே
ற்ற சிலர், கோவில் ஒதுக்குப்புறமாக சீட்டாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வெள்ளகோவில் போலீசார் சென்றபோது, சூதாடிக் கொண்டிருந்த வெள்ளகோவிலை சேர்ந்த தங்கராஜ்-, 47, மூர்த்தி, -50, ராகவேந்திரன்-, 31, கமலக்கண்ணன், -44, தனசேகர்-, 50, செந்தில்முருகன், -55, சந்தோஷ்குமார்-, 37, பிரபு-, 43, பிரசாத்-, 45, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2.௯௮ லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
