ADDED : ஜூன் 02, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில் மேட்டூர்
சாலையில் உள்ள பாலாஜி ரெசிடென்-சியில், அறை எண்-221ல், சீட்டாட்டம்
நடப்பதாக வீரப்பன்சத்-திரம் போலீசாருக்கு தகவல் போனது. போலீசார் சென்று
பார்த்த போது ஒன்பது பேர் சீட்டாடி கொண்டிருந்தனர்.
அவர்களை கைது
செய்தனர். விசாரணையில் சிவகிரி, அம்மன் கோவில் கவுண்டம்பாளையம்
அர்ஜூனன், 50; ஈரோடு, சம்பத்நகர் சங்கர், 53; முத்துார், மணி-வாசகபுரம்
பொன்னுசாமி, 60; அவல்பூந்துறை, திருமங்கலம் மோகன்குமார், 47; ஈரோடு,
மாணிக்கம்பாளையம் சதீஷ்குமார், 45; வீரப்பன்சத்திரம், குமரன் வீதி
ராஜேந்திரன், 56; சூரம்பட்டிவ-லசு எம்.எஸ்.கே. நகர் சந்திரசேகரன், 56;
சித்தோடு சோமசுந்-தரம், 60; ஈரோடு திரு.வி.க. காலனி பாலசுப்பிரமணி வீதி
ராம்-குப்தா, 56, என தெரிய வந்தது.